Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 08 அக்டோபர் 2026 | 22 புரட்டாசி பராபவ வருடம்

சுங்கச்சாவடிகளில் நடப்பது, கட்டண வசூலா? கட்டாய வழிப்பறியா? - வேல்முருகன்

சுங்கச்சாவடிகளில் நடப்பது, கட்டண வசூலா? கட்டாய வழிப்பறியா? - வேல்முருகன்

காலாவதியான அனைத்து சுங்கச்சாவடிகளையும் உடனடியாக மூட வேண்டும் என்றும், மக்களிடம் வசூலிக்கப்படும் அநியாயக் கட்டணத்தை நிறுத்த வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் என்ற பெயரில் நடைபெறும் அதிகப்படியான கட்டண வசூலுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல ஆண்டுகளாக மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு, கைது மற்றும் சிறைவாசத்தையும் சந்தித்து மக்களுக்காகக் களத்தில் போராடியுள்ளோம். விக்கிரவாண்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து எடுத்துரைத்து, காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என வலியுறுத்தியபோதும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சுங்கச்சாவடிகள் தொடர்பாக முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாகவும், பாலங்கள் மோசமான நிலையிலும் இருக்கும் நிலையில், கட்டண வசூல் மட்டும் தொடர்ந்து நடைபெறுவது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தக் கேள்விகளையே தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல ஆண்டுகளாக முன்வைத்து வருவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே முதலீடு செய்யப்பட்ட தொகையைவிட பல மடங்கு வருவாய் கிடைத்த பின்னரும், தொடர்ந்து மக்களிடம் கட்டணம் வசூலிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சாலைப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தாமல் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Advertisement
ஒப்பந்தக் காலம் முடிந்துவிட்டதாக மாநில அரசு அறிவித்துள்ள சுங்கச்சாவடிகள் தொடர்ந்து செயல்படுவதன் பின்னணி என்ன? அவற்றைத் தொடர்ந்து இயக்க அனுமதிப்பதன் மூலம் யாருக்கு லாபம் கிடைக்கிறது? என்றும் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 2023-ம் ஆண்டு விதிகளை காரணம் காட்டி கட்டண வசூல் நீட்டிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், அதற்கான விதிகள் மற்றும் ஒப்பந்த விவரங்களை பொதுமக்கள் முன்பு வெளியிட மத்திய அரசுக்கு துணிவு உள்ளதா என்றும் அவர் கேட்டுள்ளார். மேலும், 60 கிலோமீட்டர் இடைவெளியில் ஒரு சுங்கச்சாவடி என்ற விதி இருக்கும்போது, பல இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு மக்களிடம் கட்டணம் வசூலிப்பது எவ்வாறு நியாயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசும் தமிழக அரசும் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் செயல்படும் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் இதுவரை வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு, இந்த வசூல் நடைமுறை இன்னும் எத்தனை காலம் தொடரும் என்பவை குறித்த முழுமையான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். மக்கள் சாலைகளில் பயணிப்பதற்காக அவர்களிடம் எந்த வகையிலும் வரி வசூலிக்கக் கூடாது என்பதே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, காலாவதியான அனைத்து சுங்கச்சாவடிகளையும் உடனடியாக மூடுவதுடன், மக்களிடம் வசூலிக்கப்படும் அநியாயக் கட்டணத்தையும் நிறுத்த வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் கடுமையான போராட்டங்களையும் மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும் என வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு