Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 17 செப்டம்பர் 2026 | 1 புரட்டாசி பராபவ வருடம்

திருப்பதி பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் அருள்பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் அருள்பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று காலை சிம்ம வாகன சேவை நடைபெற்றது. இதையொட்டி, உற்சவர் மலையப்ப சுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமியின் திருக்கோலத்தை தரிசிக்க மாட வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த கேலரிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

Advertisement
கோவில் வளாகத்திலும் பகவானின் உக்கிரமான அவதார திருக்கோலத்தை காண ஏராளமானோர் குவிந்தனர். இந்த நிகழ்வில் திருமலை ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு