Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 16 அக்டோபர் 2026 | 30 புரட்டாசி பராபவ வருடம்

ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் திருவடி தரிசனம் இன்று முதல் தொடக்கம்

ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் திருவடி தரிசனம் இன்று முதல் தொடக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மூலவர் பெரிய பெருமாளுக்கு சாற்றப்பட்ட தைலக்காப்பு உலர்ந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் பக்தர்கள் அவரது திருவடியைத் தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ரங்கநாதர் கோவிலில், மூலவர் பெரிய பெருமாளின் திருமேனி சுதையால் உருவாக்கப்பட்டது. இதனால் அவருக்கு வழக்கமான அபிஷேகம் நடைபெறுவதில்லை. மாறாக, திருமேனியைப் பாதுகாக்கும் வகையில் ஆண்டுக்கு இருமுறை சிறப்பு தைலக்காப்பு சாற்றப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகத்தின்போது முதல் தைலக்காப்பு சாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, திருப்பவித்ரோற்சவ விழா நிறைவடைந்த மறுநாள் இரண்டாவது முறையாக தைலக்காப்பு சாற்றப்பட்டது. அகில் கட்டை, பச்சைக் கற்பூரம், வெட்டிவேர் உள்ளிட்ட வாசனைப் பொருட்கள் மற்றும் பல்வேறு மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரத்யேக தைலம், பெரிய பெருமாளின் திருமேனி முழுவதும் பூசப்பட்டது.

Advertisement
இதன் காரணமாக, பெருமாளின் திருமுகத்தைத் தவிர மற்ற உடல் பகுதிகளும் திருவடியும் மெல்லிய துணியால் மறைக்கப்பட்டன. இதனால், பக்தர்கள் திருமுகத்தை மட்டும் தரிசித்து வந்த நிலையில், திருவடி தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தைலக்காப்பு உலர்ந்ததும் பெருமாளின் முழுத் திருமேனியையும் பக்தர்கள் தரிசிக்கலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தைலக்காப்பு உலர்ந்துள்ளதால், இன்று மாலை பெருமாளின் திருமேனியை மறைத்துள்ள திரை அகற்றப்பட உள்ளது. இதையடுத்து, இன்று மாலை 4 மணி முதல் பக்தர்கள் பெரிய பெருமாளின் திருவடியைத் தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு