Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 11 செப்டம்பர் 2026 | 26 ஆவணி பராபவ வருடம்

திருச்செந்தூரில் மீன் கடைகளுக்கு ஆன்லைன் ஏலம்: பெண் வியாபாரிகள் மறியல்

திருச்செந்தூரில் மீன் கடைகளுக்கு ஆன்லைன் ஏலம்: பெண் வியாபாரிகள் மறியல்

திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக மீன் வியாபாரம் செய்து வரும் கடைகளை ஆன்லைன் மூலம் ஏலம் விட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் மீன் வியாபாரிகள் மீன்களுடன் சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட மீன் அங்காடிகளில் உள்ள கடைகளை ஆன்லைன் முறையில் ஏலம் விட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் தங்களது நீண்டகால வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பெண் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இதே பகுதியில் மீன் விற்பனை செய்து வருவதாகவும் அவர்கள் கூறினர். ஆன்லைன் ஏல அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும், தாங்கள் வியாபாரம் செய்து வரும் மீன் கடைகளை தங்களுக்கே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, பெண் வியாபாரிகள் மீன் கூடைகளுடன் திருச்செந்தூர் முக்கிய சாலைக்கு வந்தனர். தொடர்ந்து, தாங்கள் கொண்டு வந்த மீன்களை சாலையின் நடுவில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு