Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் சுகன்யா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அமராவதி சிலையில் இருந்து தொடங்கிய அவரது ரோடு ஷோ, பொள்ளாச்சி சாலை மற்றும் பெரியகடை வீதி வழியாக நடைபெற்றது. வழிநெடுகிலும் தி.மு.க. தொண்டர்கள் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரோடு ஷோவின்போது பொதுமக்கள் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகங்கள், பூங்கொத்துகள் மற்றும் சால்வைகளை வழங்கினர்.

Advertisement
தொடர்ந்து பெரியகடை வீதி பகுதியில் உள்ள கடைகளுக்குச் சென்ற அவர், அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அவருடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு உடுமலை சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,775
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு