திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகிலுள்ள ஆலாங்காயம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக (எஸ்எஸ்ஐ) பணியாற்றி வரும் ராமகிருஷ்ணன், விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிப்பதற்காக அதன் உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், ராமகிருஷ்ணனை லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்டிருந்தபோதே கையும் களவுமாக பிடித்தனர்.
Advertisement
இதையடுத்து, அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் லஞ்சத் தொகையை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராமகிருஷ்ணனை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.