Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 13 செப்டம்பர் 2026 | 28 ஆவணி பராபவ வருடம்

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை; அமைச்சர் நிர்மல் குமார் உறுதி

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை; அமைச்சர் நிர்மல் குமார் உறுதி

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். நெல்லையில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, முதலில் வந்தே மாதரம், அதனைத் தொடர்ந்து தேசிய கீதம், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என கவர்னர் அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை வந்துள்ளதாகவும், அதன்படி நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் என். சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், சென்னை நகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக கவர்னர் தரப்பிலிருந்து தொடர்ந்து பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

Advertisement
அவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என்றார்.மேலும், தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்தில் பாடுவது ஏற்க முடியாத ஒன்று என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு