Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

தமிழ்நாடு நாள்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து – தமிழரின் பெருமையைப் போற்றுவோம்

தமிழ்நாடு நாள்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து – தமிழரின் பெருமையைப் போற்றுவோம்
சென்னை, ஜூலை 18:தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் மொழியுணர்வை போற்றும் வகையில் மாநிலத்திற்கு "தமிழ்நாடு" என்ற பெயர் வழங்கப்பட்ட நாளின் முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்து, அனைத்து தமிழ் மக்களுக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மேலும், மெட்ராஸ் மாநிலம் உருவான நவம்பர் 1 மற்றும் "தமிழ்நாடு" என்ற பெயரை வழங்கிய வரலாற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18 ஆகிய இரு நாட்களையும் அரசு சிறப்பாகக் கொண்டாடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.சமூகநீதி, சமத்துவம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் திறன்மிகு மனிதவளத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேறி, இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ அனைவரும் உறுதியேற்க வேண்டுமென அவர் அழைப்பு விடுத்துள்ளார்.அத்துடன், தமிழின் செம்மை, தமிழரின் உயரிய பண்பாடு மற்றும் மனிதநேய மரபு தலைமுறைகள் கடந்தும் வளர வேண்டும் என்றும், தமிழ்நாடு உருவாக பாடுபட்ட தலைவர்கள் மற்றும் தியாகிகளை இந்த நாளில் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு