Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 19 செப்டம்பர் 2026 | 3 புரட்டாசி பராபவ வருடம்

தமிழகத்தில் கலர் அப்பள விற்பனைக்கு தடை

தமிழகத்தில் கலர் அப்பள விற்பனைக்கு தடை

தமிழகத்தில் அதிக அளவு செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளங்களின் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது. ஆய்வகச் சோதனைகளில், பல கலர் அப்பளங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நிறமூட்டிகள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சாயங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதுபோன்ற அப்பளங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமானக் கோளாறு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு, அலர்ஜி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நீண்டகாலமாக உட்கொண்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக குழந்தைகள் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இயற்கை அப்பளங்களைத் தேர்வு செய்வது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வாராந்திர சந்தைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் பொருட்காட்சிகளில் கலர் அப்பளம் விற்பனை செய்யக் கூடாது என்றும், விதிமீறினால் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு