Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வியாழன் | 10 செப்டம்பர் 2026 | 25 ஆவணி பராபவ வருடம்

டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஊழியர் பலி

டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஊழியர் பலி

தென்கிழக்கு டெல்லியின் ஓக்லா-1 பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் குடோனில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இந்த குடோனில் மருத்துவமனைகள் உள்ளிட்ட தொழில்துறை தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று வாகனம் மூலம் கொண்டு வரப்பட்ட சிலிண்டர்களை ஊழியர்கள் இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது வாகனத்தில் இருந்த சிலிண்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தது.

Advertisement
சிறிது நேரத்தில் அந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 5 ஊழியர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மற்ற 4 பேரும் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஓக்லா-1 பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு