Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வியாழன் | 10 செப்டம்பர் 2026 | 25 ஆவணி பராபவ வருடம்

சட்டமன்ற தேர்தல்களுக்கு பா.ஜ.க. ரூ.1,473 கோடி நன்கொடை பெற்றதாக அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல்களுக்கு பா.ஜ.க. ரூ.1,473 கோடி நன்கொடை பெற்றதாக அறிவிப்பு

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களையொட்டி தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தாக்கல் செய்துள்ள வரவு-செலவு கணக்குகள் வெளியாகியுள்ளன. தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கணக்குகளின்படி, பா.ஜ.க. தேசிய தலைமை ரூ.1,472.8 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை மற்றும் மாநில அமைப்புகள் இணைந்து ரூ.207.17 கோடி நன்கொடை பெற்றுள்ளன. இதன்படி, காங்கிரசை விட பா.ஜ.க. சுமார் 7 மடங்கு அதிக நன்கொடை பெற்றுள்ளது. பா.ஜ.க. தேசிய தலைமை அலுவலகம் மூலம் பெறப்பட்ட ரூ.1,472.8 கோடி மட்டுமே தற்போது கணக்கில் இடம்பெற்றுள்ளது. கட்சியின் மாநில அலுவலகங்கள் வாயிலாக பெறப்பட்ட நன்கொடை விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனவே, பா.ஜ.க. பெற்ற மொத்த நன்கொடை தொகை மேலும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 3 மாநிலங்களில் பா.ஜ.க. ரூ.159.7 கோடி செலவு அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் பணிகளுக்காக பா.ஜ.க. ரூ.159.7 கோடி செலவிட்டுள்ளது. இதில் ரூ.130.4 கோடி பிரசாரத்திற்காகவும், மீதமுள்ள தொகை வேட்பாளர்களின் செலவுகள் உள்ளிட்டவற்றிற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் அசாம் மாநிலத்துக்கு அதிகபட்சமாக ரூ.96.27 கோடியை பா.ஜ.க. தலைமை செலவிட்டுள்ளது. இதில் ரூ.76.73 கோடி பிரசாரத்திற்கும், ரூ.19.54 கோடி வேட்பாளர்களுக்குமான செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.51.56 கோடி செலவு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.

Advertisement
தேசிய தலைமை ரூ.51.56 கோடி செலவிட்டுள்ளது. இதில் ரூ.44.51 கோடி பிரசாரத்திற்கும், ரூ.7.05 கோடி வேட்பாளர்களுக்குமான செலவுகளுக்கும் சென்றுள்ளது. புதுச்சேரியில் கட்சி ரூ.11.90 கோடி செலவு செய்துள்ளது. இதில் ரூ.9.19 கோடி பிரசாரத்திற்கும், ரூ.2.71 கோடி வேட்பாளர்களுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது. 5 மாநிலங்களில் காங்கிரஸ் ரூ.248.55 கோடி செலவு காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, 5 மாநில தேர்தல்களிலும் பிரசாரத்திற்காக ரூ.143 கோடியும், வேட்பாளர்களுக்காக ரூ.105.55 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இதன்படி, மொத்த தேர்தல் செலவு ரூ.248.55 கோடியாக இருப்பதாக தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரசார செலவுக்காக கட்சி மேலிடம் ரூ.40.52 கோடியை வழங்கியுள்ளது. மீதமுள்ள ரூ.102.49 கோடியை மாநில மற்றும் உள்ளூர் கட்சி அமைப்புகள் செலவிட்டுள்ளன. காங்கிரசின் 5 மாநில தேர்தல் செலவில் அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.59.28 கோடி செலவிடப்பட்டுள்ளது. அடுத்ததாக அசாமில் ரூ.22.62 கோடி செலவிடப்பட்டுள்ளது. பா.ஜ.க. கையிருப்பு ரூ.7,627.2 கோடி 5 மாநில தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், பா.ஜ.க.வின் இறுதி கையிருப்பு ரூ.7,627.2 கோடியாக உள்ளது. மார்ச் 15-ம் தேதி அந்த கட்சியிடம் ரூ.6,722.6 கோடி இருந்த நிலையில், தற்போது ரூ.904.6 கோடி அதிகரித்துள்ளது. மறுபுறம், காங்கிரஸ் கட்சியின் கையிருப்பு ரூ.103.2 கோடியாக உள்ளது. முந்தைய இருப்பான ரூ.169.06 கோடியுடன் ஒப்பிடுகையில், இது ரூ.65.86 கோடி குறைவாகும்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு