Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ படத்தை பார்க்க வந்த தாயார் சங்கீதா

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ படத்தை பார்க்க வந்த தாயார் சங்கீதா

நடிகரும் தமிழக முதல்-அமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜேசன் சஞ்சயின் முதல் படம் என்பதாலும், அவர் விஜய்யின் மகன் என்பதாலும் ‘சிக்மா’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் தொடக்கம் முதலே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், படத்தின் முதல் காட்சியை காண ஜேசன் சஞ்சயின் தாயாரும், முதல்-அமைச்சர் விஜய்யின் மனைவியுமான சங்கீதா திரையரங்கிற்கு வந்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள திரையரங்கில் அவர் ‘சிக்மா’ படத்தை பார்த்து வருகிறார். இதனிடையே, ஜேசன் சஞ்சயின் முதல் படத்தை அவரது தந்தையான முதல்-அமைச்சர் விஜய் பார்ப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Advertisement
முன்னதாக, பேட்டி ஒன்றில் ஜேசன் சஞ்சயிடம், தனது தந்தை படத்தை பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்து ஒரு நிமிடம் அமைதியாக இருந்தால் என்ன நினைப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தனது தந்தை பொதுவாகவே அமைதியானவர் என்றும், கேள்வி கேட்டால் கூட யோசித்து பதிலளிக்க சுமார் 10 விநாடிகள் எடுத்துக்கொள்வார் என்றும் கூறியிருந்தார். ஒரு நிமிடம் வரை அவர் அமைதியாக இருந்தால், “அப்பா போனை கட் பண்ணிட்டீங்களா?” என்று கேட்டுவிட்டு அழைப்பை முடித்துவிடுவேன் எனவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்திருந்தார். ஒரு திரைப்படத்தை ஆராய்ந்து கருத்து தெரிவிக்க சிறிது நேரம் தேவைப்படும் என்றும், தனது முதல் படத்தை பார்த்த பிறகு தனது தந்தை நிச்சயம் பெருமைப்படுவார் என்றும் அவர் கூறியிருந்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,775
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு