ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ படத்தை பார்க்க வந்த தாயார் சங்கீதா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
02 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 02 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ படத்தை பார்க்க வந்த தாயார் சங்கீதா

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ படத்தை பார்க்க வந்த தாயார் சங்கீதா

நடிகரும் தமிழக முதல்-அமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜேசன் சஞ்சயின் முதல் படம் என்பதாலும், அவர் விஜய்யின் மகன் என்பதாலும் ‘சிக்மா’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் தொடக்கம் முதலே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், படத்தின் முதல் காட்சியை காண ஜேசன் சஞ்சயின் தாயாரும், முதல்-அமைச்சர் விஜய்யின் மனைவியுமான சங்கீதா திரையரங்கிற்கு வந்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள திரையரங்கில் அவர் ‘சிக்மா’ படத்தை பார்த்து வருகிறார். இதனிடையே, ஜேசன் சஞ்சயின் முதல் படத்தை அவரது தந்தையான முதல்-அமைச்சர் விஜய் பார்ப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, பேட்டி ஒன்றில் ஜேசன் சஞ்சயிடம், தனது தந்தை படத்தை பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்து ஒரு நிமிடம் அமைதியாக இருந்தால் என்ன நினைப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தனது தந்தை பொதுவாகவே அமைதியானவர் என்றும், கேள்வி கேட்டால் கூட யோசித்து பதிலளிக்க சுமார் 10 விநாடிகள் எடுத்துக்கொள்வார் என்றும் கூறியிருந்தார். ஒரு நிமிடம் வரை அவர் அமைதியாக இருந்தால், “அப்பா போனை கட் பண்ணிட்டீங்களா?” என்று கேட்டுவிட்டு அழைப்பை முடித்துவிடுவேன் எனவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்திருந்தார். ஒரு திரைப்படத்தை ஆராய்ந்து கருத்து தெரிவிக்க சிறிது நேரம் தேவைப்படும் என்றும், தனது முதல் படத்தை பார்த்த பிறகு தனது தந்தை நிச்சயம் பெருமைப்படுவார் என்றும் அவர் கூறியிருந்தார்.