சேலத்தில் 3,600 ஆண்டுகள் பழமையான மனித புதைகுழிகள் கண்டுபிடிப்பு
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வின்போது, சுமார் 3,600 ஆண்டுகள் பழமையான மனித புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வின்போது முதுமக்கள் தாழிகள், மண் பானைகள், கற்களால் அமைக்கப்பட்ட புதைகுழி கட்டமைப்புகள் உள்ளிட்ட பல தொல்லியல் சான்றுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இவை அப்பகுதியில் பண்டைய கால மனிதர்களின் வாழ்வியல், அடக்க முறைகள் மற்றும் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தும் முக்கிய ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன.கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் ஆய்வுக்காக பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டுள்ளன.
அவற்றின் வயது மற்றும் வரலாற்றுப் பின்னணியை உறுதிப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்தக் கண்டுபிடிப்பு, தமிழகத்தின் தொன்மையான நாகரிக வரலாற்றை மேலும் வெளிக்கொணரும் முக்கியமான தொல்லியல் ஆதாரமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.