Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 18 செப்டம்பர் 2026 | 2 புரட்டாசி பராபவ வருடம்

சென்னைக்கு வந்த 35 புதிய மெட்ரோ ரெயில்கள்

சென்னைக்கு வந்த 35 புதிய மெட்ரோ ரெயில்கள்

சென்னையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டப் பணிகள் 5 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் பூந்தமல்லி–கலங்கரை விளக்கம் இடையேயான வழித்தடத்தில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. ரெயில் சேவையை தொடங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான மத்திய அரசின் உத்தரவு இன்னும் கிடைக்காததால், கடந்த 4 மாதங்களாக இந்த வழித்தடத்தில் சேவை தொடங்கப்படாமல் உள்ளது. போரூர் சந்திப்பு முதல் பவர் ஹவுஸ் வரையிலான உயர்மட்டப் பாதையில் 91 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

Advertisement
தற்போது நிலையங்களின் அலங்காரம் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், சுரங்கப்பாதை பணிகளில் 54 சதவீதம் முடிந்துள்ள நிலையில், அப்பகுதியில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் சேவையை இயக்குவதற்குத் தேவையான 35 மெட்ரோ ரெயில்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவை பூந்தமல்லியில் அமைந்துள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில்களுக்கான சோதனை ஓட்டங்களும் தற்போது நடைபெற்று வருகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு