Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 08 அக்டோபர் 2026 | 22 புரட்டாசி பராபவ வருடம்

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: 2-வது நாளாக குளிக்க தடை

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: 2-வது நாளாக குளிக்க தடை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த கும்பக்கரை அருவிக்கு தேனி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை, வட்டக்கானல், பாம்பார்புரம், வெள்ள கெவி உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அருவிக்கு நீர்வரத்து கிடைக்கிறது. கடந்த சில மாதங்களாக மழை குறைந்திருந்ததால் அருவி வறண்டு காணப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த மாதம் 15-ந் தேதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அருவிக்கு நீர்வரத்து தொடங்கியது. பின்னர் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளித்தனர்.

Advertisement
காலாண்டு விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் கும்பக்கரை அருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.தற்போது கொடைக்கானல் வனப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2-வது நாளாக குளிக்க தடை தொடர்கிறது.மேலும், அருவிப்பகுதிக்குள் யாரும் செல்லாத வகையில் நுழைவாயிலில் உள்ள இரும்புக் கதவு பூட்டப்பட்டுள்ளது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு