Skip to main content
🌤️ —°C
வியாழன் | 30 ஜூலை 2026 | 14 ஆடி பராபவ வருடம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
2026–27 கல்வியாண்டிற்கான தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (B.V.Sc & A.H.) மற்றும் இளநிலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான (B.Tech – உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம்) தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசின் செய்திக்குறிப்பின்படி, இந்த தரவரிசைப் பட்டியலை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செ. கமலி, இன்று (30.07.2026) காலை 10 மணிக்கு வெளியிட்டார்.இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் அரசு செயலர் அனு ஜார்ஜ், பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர் (பொறுப்பு) ர. நரேந்திரபாபு, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ச.மு.க. கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், B.V.Sc & A.H.
Advertisement
மற்றும் B.Tech படிப்புகளில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டன.தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களது தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழகத்தின் [https://adm.tanuvas.ac.in](https://adm.tanuvas.ac.in) மற்றும் [https://tanuvas.ac.in](https://tanuvas.ac.in) ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு (Online Counselling) தொடர்பான விவரங்கள் விரைவில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியல் தொடர்பான சந்தேகங்களுக்கு, 31.07.2026 முதல் 02.08.2026 வரை 044-29997349, 044-29997348 என்ற தொலைபேசி எண்களில் அல்லது [admission@tanuvas.org.in](mailto:admission@tanuvas.org.in) என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு