Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
திங்கள் | 31 ஆகஸ்ட் 2026 | 15 ஆவணி பராபவ வருடம்

காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டிக்கொலை; மனைவியின் சகோதரர்கள் மீது ஆணவக் கொலை புகார்

பஞ்சாப் மாநிலம் தரன் பகுதியில் காதல் திருமணம் செய்துகொண்ட 22 வயது இளைஞர் ஜக்ஜித் சிங், அவரது மனைவியின் சகோதரர்களால் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜக்ஜித் சிங், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர்கடும்எதிர்ப்புதெரிவித்ததாகதெரிகிறது.இந்நிலையில், நேற்று ஜக்ஜித் சிங்கை பேருந்து நிலையத்திற்கு வருமாறு அவரது மனைவியின் தாய் அழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே காத்திருந்த பெண்ணின் சகோதரர்களான ஜஸ்பிரீத் சிங் மற்றும் ஹர்பிரீத்சிங்ஆகியோர்,ஜக்ஜித்சிங்கைகத்தியால்சரமாரியாகதாக்கியுள்ளனர்.இந்தகொடூரதாக்குதலில்படுகாயமடைந்தஜக்ஜித்சிங்,சம்பவஇடத்திலேயேஉயிரிழந்தார்.சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

Advertisement
ஜஸ்பிரீத் சிங்கை போலீசார் கைது செய்த நிலையில், மற்றொரு சகோதரரான ஹர்பிரீத் சிங் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆணவக் கொலை தொடர்பான கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு