பஞ்சாப் மாநிலம் தரன் பகுதியில் காதல் திருமணம் செய்துகொண்ட 22 வயது இளைஞர் ஜக்ஜித் சிங், அவரது மனைவியின் சகோதரர்களால் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜக்ஜித் சிங், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர்கடும்எதிர்ப்புதெரிவித்ததாகதெரிகிறது.இந்நிலையில், நேற்று ஜக்ஜித் சிங்கை பேருந்து நிலையத்திற்கு வருமாறு அவரது மனைவியின் தாய் அழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே காத்திருந்த பெண்ணின் சகோதரர்களான ஜஸ்பிரீத் சிங் மற்றும் ஹர்பிரீத்சிங்ஆகியோர்,ஜக்ஜித்சிங்கைகத்தியால்சரமாரியாகதாக்கியுள்ளனர்.இந்தகொடூரதாக்குதலில்படுகாயமடைந்தஜக்ஜித்சிங்,சம்பவஇடத்திலேயேஉயிரிழந்தார்.சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஜஸ்பிரீத் சிங்கை போலீசார் கைது செய்த நிலையில், மற்றொரு சகோதரரான ஹர்பிரீத் சிங் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆணவக் கொலை தொடர்பான கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.