Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
திங்கள் | 31 ஆகஸ்ட் 2026 | 15 ஆவணி பராபவ வருடம்

அரியானா: கழிவறையில் பதுங்கியிருந்த 6 அடி நீள நாகப்பாம்பு - வனத்துறையினர் மீட்பு

அரியானா: கழிவறையில் பதுங்கியிருந்த 6 அடி நீள நாகப்பாம்பு - வனத்துறையினர் மீட்பு

குருகிராம்: அரியானா மாநிலம் குருகிராமில், வீட்டின் கழிவறை கோப்பைக்குள் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள விஷ நாகப்பாம்பு, வனவிலங்கு பாதுகாப்பு குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.குருகிராம் அருகே உள்ள காடோலி கலான் கிராமத்தில் ஒரு வீட்டின் கழிவறையில் இருந்து தொடர்ந்து பாம்பு சீறும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர்கள், உடனடியாக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் கிடைத்ததும், வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர் அனில் காந்தாஸ் தலைமையிலான மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கழிவறையை ஆய்வு செய்தபோது, கழிவறை கோப்பையின் உட்புறத்தில் இருந்த குறுகிய இடைவெளிக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள கண்ணாடி நாகப்பாம்பு சிக்கியிருந்தது தெரியவந்தது.பாம்பை நேரடியாக வெளியே எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், மீட்புக் குழுவினர் கழிவறை இருக்கையை மிகுந்த எச்சரிக்கையுடன் உடைத்து பாம்பை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, பாம்பு எவ்வித காயமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டது. பின்னர் அது அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், வேகமாக நடைபெறும் நகரமயமாக்கலால் பாம்புகளின் இயற்கைவாழ்விடங்கள்பாதிக்கப்பட்டுவருகின்றன.இதன்காரணமாகஉணவுமற்றும்பாதுகாப்பானஇடத்தைத்தேடிபாம்புகள்குடியிருப்புபகுதிகளுக்குள்வருவதாகதெரிவித்தனர்.மேலும்,கடந்த3மாதங்களில்மட்டும்இந்தப்பகுதியில்200க்கும்மேற்பட்டபாம்புகள்மீட்கப்பட்டுள்ளதாகவும்அவர்கள்தெரிவித்தனர்.தற்போதுமழைக்காலம்என்பதால்பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு