சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்தின் செயல்பாட்டை தமிழக அரசு சுட்டிக்காட்ட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் தொடர்ந்து குறைத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வலுவாக எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு காவிரியில் தினமும் வினாடிக்கு 9,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த அளவுக்குக்கூட கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை. ஜூன் மாதம் தொடங்கி இதுவரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில் 55 டி.எம்.சி. தண்ணீர் நிலுவையில் உள்ள நிலையில், ஆணையம் நிர்ணயித்த குறைந்தபட்ச அளவையும் வழங்காதது கண்டிக்கத்தக்கது. காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயத் தேவையை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 12 முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல நாட்கள் அந்த அளவில் நீர் திறக்கப்படவில்லை. இதையடுத்து ஆகஸ்ட் 27 முதல் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது.இருப்பினும், ஆகஸ்ட் 27 முதல் 30-ம் தேதி வரையிலான நான்கு நாட்களிலும் பிலிகுண்டுலு நீரளவு கண்காணிப்பு மையத்தை எட்டிய நீரின் அளவு 9,000 கனஅடிக்கும் குறைவாகவே இருந்தது.ஆகஸ்ட் 26-ம் தேதி வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் தமிழகத்தை நோக்கி வர வேண்டிய நிலையில், 10,405 கனஅடி மட்டுமே வந்துள்ளது. அதேபோல், ஆகஸ்ட் 27 முதல் தினமும் 9,000 கனஅடி நீர் வர வேண்டும் என்ற நிலையில், 27-ம் தேதி 7,454 கனஅடி, 28-ம் தேதி 7,094 கனஅடி, 29-ம் தேதி 6,702 கனஅடி, 30-ம் தேதி 6,887 கனஅடி மட்டுமே பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது.இதற்கிடையே, கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 13,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், அதில் பாதியளவு மட்டுமே பிலிகுண்டுலுவை வந்தடைவதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.கர்நாடக அணைகளில் இருந்து பிலிகுண்டுலு வரையிலான பயணத்தில் 1 முதல் 2 சதவீதம் வரை நீர் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஆனால் தினமும் 20 முதல் 25 சதவீதம் வரை குறைவான தண்ணீரே தமிழகத்தை வந்தடைவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதாக கணக்கு காட்டிவிட்டு, அந்த நீரை கர்நாடகம் வேறு பயன்பாட்டிற்கு திருப்பி விடுகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி, தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி., ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி., ஆகஸ்ட் 27-ம் தேதி வரை 40.10 டி.எம்.சி.