காசிமேடு மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது
சென்னையின் காசிமேடு மீன்பிடி துறைமுக சந்தையில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாகவே அதிகளவில் மக்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி சந்தை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி பரபரப்பாக காணப்பட்டது.இதனுடன், சந்தைக்கு மீன்களின் வரத்தும் கணிசமாக அதிகரித்திருந்தது.
வஞ்சிரம், சங்கரா, நண்டு, இறால் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் அதிக அளவில் விற்பனையானதால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. தங்களுக்குத் தேவையான மீன்களை வாங்குவதற்காக மீன் பிரியர்கள் ஆர்வத்துடன் திரண்டதால், சந்தை முழுவதும் திருவிழா சூழலை ஒத்த பரபரப்பு நிலவியது.