கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நடவடிக்கையாக, 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் விஜய் நாளை வழங்க உள்ளார். கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் அவர், அரசு விழாவில் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்குவதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளிடம் வழங்கவுள்ளார். மேலும், ரூ.1,700 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
Advertisement
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு விழா மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.