Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 20 அக்டோபர் 2026 | 3 ஐப்பசி பராபவ வருடம்

ஏமனில் ராணுவ முகாம் மீது ஹவுதிகள் ஏவுகணைத் தாக்குதல்: 73 வீரர்கள் பலி

ஏமனில் ராணுவ முகாம் மீது ஹவுதிகள் ஏவுகணைத் தாக்குதல்: 73 வீரர்கள் பலி

ஏமனின் தெற்கு மாகாணமான ஷப்வாவில் உள்ள ராணுவப் பயிற்சி முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 73 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உள்நாட்டுப் போரால் தொடரும் மோதல் ஏமனில் அரசுப் படைகளுக்கும், ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்டகாலமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. தலைநகர் சனா உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால், ஏமன் அரசு ஏடன் நகரைத் தற்காலிகத் தலைநகராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த மோதலில் ஏமன் அரசுப் படைகளுக்கு சவுதி அரேபியா ஆதரவளித்து வருகிறது. இதன் காரணமாக, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலும் மோதல் நீடிக்கிறது. ஏமன் அரசுப் படைகள் மற்றும் அரசு கட்டிடங்களைக் குறிவைத்தும் ஹவுதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 3 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீச்சு இந்தச் சூழலில், தெற்கு ஷப்வா மாகாணத்தில் அமைந்துள்ள ஏமன் அரசின் அல்-ஆலம் ராணுவ முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

Advertisement
புதிய வீரர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களை ராணுவத்தில் இணைப்பதற்கான இந்த முகாமில், வீரர்கள் அணிவகுப்பில் நின்றுகொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 73 வீரர்கள் உயிரிழந்ததுடன், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என ஏமன் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ராணுவப் பயிற்சிக்காகவும், புதிய வீரர்கள் தேர்வுக்காகவும் வந்திருந்த அவர்கள் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தனர். பதிலடி கொடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை தனது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஏமன் அரசு தெரிவித்துள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் ஆயுத உதவி உள்ளிட்ட ஆதரவுகள் கிடைத்தபோதிலும், இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்வதில் சவுதி அரேபியா சிரமங்களைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,490
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு