Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 19 அக்டோபர் 2026 | 2 ஐப்பசி பராபவ வருடம்

2028 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ஜே.டி. வான்ஸ் அறிவிப்பு

2028 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ஜே.டி. வான்ஸ் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2025-ம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பதவியேற்றார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அவருடைய பதவிக்காலம் 2028-ம் ஆண்டுடன் நிறைவடைகிறது. அமெரிக்காவில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் போட்டியிடுவார் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். மிச்சிகனில் தனியார் செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தனது அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தபோது இதனைத் தெரிவித்தார். டிரம்ப் தனக்கு ஆதரவாக இருந்தாலும், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று வான்ஸ் கூறினார்.

Advertisement
இதற்கான காரணத்தை விளக்கிய அவர், தனக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும், தனது மனைவி உஷாவுக்கும் அரசியலில் அதிக ஆர்வம் இல்லை என்றும் குறிப்பிட்டார். குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். அதேவேளையில், முக்கியமான முடிவுகளை எடுப்பதில் தான் எப்போதும் காலதாமதம் செய்வதாகவும் வான்ஸ் தெரிவித்தார். டிரம்ப், ஜே.டி. வான்ஸை தனது அரசியல் வாரிசாகப் பகிரங்கமாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், அவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனத் தெரிவித்திருப்பது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. வான்ஸ் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால், 2028-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் யார் வேட்பாளராகப் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,535
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு