Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 09 அக்டோபர் 2026 | 23 புரட்டாசி பராபவ வருடம்

உக்ரைன் ராணுவ மந்திரியை திடீரென நீக்கிய ஜெலன்ஸ்கி

உக்ரைன் ராணுவ மந்திரியை திடீரென நீக்கிய ஜெலன்ஸ்கி

உக்ரைன் ராணுவ மந்திரியாக இருந்த மைக்கேலோ பெடோரோவ் கடந்த மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.இதற்கான காரணங்கள் குறித்து கீவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விளக்கம் அளித்தார்.அப்போது அவர் கூறுகையில், “பெடோரோவ் சில தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ரஷியாவுடன் போர் நடைபெற்று வரும் சூழலிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.மேலும், ரஷியப் பகுதிகளில் ஸ்டார்லிங்க் சேவையை பயன்படுத்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் எனக்கு தகவல் தெரிவித்தது. அந்த தகவலை நம்பி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் இது தொடர்பாக பேசினேன்.பின்னர் எலான் மஸ்க்கிடம் இதுகுறித்து உறுதி செய்தபோது, அத்தகைய அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்று அவர் மறுத்தார்.

Advertisement
இதனால் டிரம்பிடம் பேசும்போது தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.அதேபோல், பாதுகாப்புத் துறையில் முன்கூட்டியே நிதி செலவிடப்பட்டதால், 2026-ம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான செலவினங்களுக்கு 2,700 கோடி டாலர் அளவுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது.இதுபோன்ற காரணங்களே ராணுவ மந்திரி பதவியில் இருந்து பெடோரோவை நீக்குவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன” என்று தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு