Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 28 அக்டோபர் 2026 | 11 ஐப்பசி பராபவ வருடம்

இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி

* வைபவ் சூர்வன்ஷியின் துணிச்சலாக பேட்டிங் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

கிரிக்கெட் லீக் தொடரில் வைபவ் வெளிப்படுத்திய சீரான பேட்டிங் திறமை வியக்கத்தக்கது. இவரை காண்பதற்காகவே, ராஜஸ்தான் மோதும் போட்டிகளை பார்த்தேன்.

பயிற்சியில் ஆர்ச்சரின் பந்துகளை எதிர்கொண்ட விதம் பிரமிக்க வைத்தது.

* இங்கிலாந்து தொடரில் அறிமுகம் ஆவாரா வைபவ்?

இளம் வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகம் ஆவது மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் 'டி-20', ஒருநாள் அரங்கில் சிறந்த வீரராக திகழ்வார் என நம்பிக்கை உள்ளது.

* வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது, இங்கிலாந்துக்கு சாதகமா?

'டி-20' உலக கோப்பை அரையிறுதியில் (2026) எங்களது தோல்விக்கு முக்கிய காரணம் பும்ரா தான். இவர் இல்லாதது இந்திய அணிக்கு இழப்பு தான். எதிரணிக்கு மிகப்பெரிய சாதகம். கிரிக்கெட் ரசிகர்கள் பும்ரா விளையாடுவதையே விரும்புவர்.

Advertisement

* அயர்லாந்து தொடரில் தோற்றது இந்திய வீரர்களை மன ரீதியாக பாதிக்குமா?

'டி-20' உலக கோப்பையில் இரு முறை சாம்பியன் இந்தியா. லேசான பாதிப்பு இருந்தாலும், ஒரே போட்டியில் மீண்டு வந்து விடுவர். யாராவது ஒரு பேட்டர் கைகொடுத்தாலே போதும், வெற்றிப் பாதைக்கு திரும்பிவிடலாம்.

* சாம்சன், இஷான் கிஷான் என இரு விக்கெட் கீப்பரில் யாரை உங்களுக்கு பிடிக்கும்?

இருவரும் சிறந்த பேட்டர்கள், அவர்களது ஆட்டத்தை பார்க்க மிகவும் பிடிக்கும். நானும் ஒரு விக்கெட் கீப்பர், வலது கை பேட்டர் என்பதால், எனக்கு சாம்சனை அதிகம் பிடிக்கும்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு