Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 28 அக்டோபர் 2026 | 11 ஐப்பசி பராபவ வருடம்

நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ரூ.1.52 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ரூ.1.52 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகை மற்றும் கோவில் கொடை விழாக்களை முன்னிட்டு, நெல்லை மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஒரே நாளில் ரூ.1.52 கோடிக்கும் அதிகமான மதிப்பில் ஆடுகள் விற்பனையாகின. வரும் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகைக்கான ஏற்பாடுகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஆடுகளை வாங்குவதற்கு ஏராளமானோர் திரண்டனர். இதற்கிடையே, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் முப்புடாதி அம்மன் கோவில் கொடை விழாக்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இந்த விழாக்களில் ஆடு வெட்டும் நிகழ்ச்சி இடம்பெறுவதால், சந்தையில் ஆடுகளுக்கான தேவை அதிகரித்தது.

Advertisement
நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தென்காசி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக மேலப்பாளையம் சந்தைக்குக் கொண்டு வந்தனர். ஆடுகளின் ரகம் மற்றும் தரத்தைப் பொறுத்து, ஒரு ஆடு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று மட்டும் மேலப்பாளையம் சந்தையில் ரூ.1 கோடியே 52 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பில் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல், கோழிகளின் விற்பனையும் ரூ.25 லட்சத்தைக் கடந்தது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு