Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 28 அக்டோபர் 2026 | 11 ஐப்பசி பராபவ வருடம்

கோடியக்கரையில் தொடங்கிய வெளிநாட்டுப் பறவைகள் வருகை சீசன்

கோடியக்கரையில் தொடங்கிய வெளிநாட்டுப் பறவைகள் வருகை சீசன்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அமைந்துள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில், வெளிநாட்டுப் பறவைகளின் வருகை தொடங்கியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு தாமதமாகத் தொடங்கியுள்ள பறவைகள் சீசன், தற்போது பறவை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழையால் திரும்பிய பறவைகள் ‘பறவைகளின் நுழைவுவாயில்’ என்று அழைக்கப்படும் கோடியக்கரை சரணாலயத்துக்கு, ஆண்டுதோறும் குறிப்பிட்ட பருவத்தில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து தங்குவது வழக்கம். இங்கு நிலவும் மிதமான தட்பவெப்பநிலையும், சதுப்புநிலங்களில் கிடைக்கும் உணவுகளும் பறவைகளின் வருகைக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. இந்த ஆண்டு கோடைக்காலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் ஆறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. கோடியக்கரை சதுப்புநிலப் பகுதிகளிலும் வறட்சி நிலவியது. தற்போது வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், அப்பகுதியில் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன. பொதுவாக அக்டோபர் முதல் வாரத்திலேயே பறவைகளின் வருகை தொடங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டு நிலவிய கடும் வெப்பம் காரணமாக சீசன் தாமதமாகத் தொடங்கியுள்ளது. 294-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள்! ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்து அரிய வகைப் பறவைகள் கோடியக்கரைக்கு வருகின்றன.

Advertisement
இங்கு 294-க்கும் மேற்பட்ட வகையான பறவைகளைக் காண முடியும். செங்கால்நாரை, கூழைக்கிடா, பூநாரை, கடல்காகம், கடல் ஆலா, உள்ளான், கரண்டி மூக்கு உள்ளான், வரித்தலைவாத்து, கூனி அரிச்சான் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்கள் ஆண்டுதோறும் இங்கு வருகை தருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான சீசனில், லட்சக்கணக்கான பூநாரைகள் ஒன்றாகப் பறந்து செல்லும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும். சரணாலயத்தைச் சுற்றியுள்ள சதுப்புநிலக் காடுகளில் பறவைகள் இரை தேடி வருவதும் வழக்கமான நிகழ்வாகும். இரட்டைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் அதிகரிப்பு தற்போது மழையால் சதுப்புநிலப் பகுதிகளில் பறவைகளுக்குத் தேவையான உணவும், வாழ்வதற்கு ஏற்ற சூழலும் உருவாகியுள்ளதால், வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்து வருகிறது. கோடியக்கரை சரணாலயத்தைச் சுற்றியுள்ள இரட்டைத்தீவு, கோவைத்தீவு, நெடுந்தீவு மற்றும் பம்பு ஹவுஸ் கடற்கரைப் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் பறவைகளைக் காண முடிவதாகப் பறவை ஆராய்ச்சி விஞ்ஞானி சிவக்குமார் தெரிவித்துள்ளார். கோடியக்கரைக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியிருப்பது சுற்றுலா ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு