Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

ஆஸ்திரேலியா தொடர் வங்காளதேச மகளிர் அணியின் திறனை சோதிக்கும் – டேவிட் ஹெம்ப்

ஆஸ்திரேலியா தொடர் வங்காளதேச மகளிர் அணியின் திறனை சோதிக்கும் – டேவிட் ஹெம்ப்

வங்காளதேச மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டேவிட் ஹெம்ப், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தங்கள் அணியின் தற்போதைய திறனை மதிப்பிடுவதற்கான முக்கிய வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 55 வயதான டேவிட் ஹெம்ப், வங்காளதேச மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தை ஆஸ்திரேலியத் தொடருடன் தொடங்குகிறார். பிரிஸ்பேனில் அணியுடன் இணையும் அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் முறையாக தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கிறார்.

Advertisement
வங்காளதேச அணியுடன் மீண்டும் இணைவது குறித்து பேசிய ஹெம்ப், ஏற்கனவே அந்த அணியுடன் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் மீண்டும் அணியுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். மேலும், அணியின் சூழல் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், வீராங்கனைகளுடன் ஏற்கனவே இணைந்து பணியாற்றியுள்ளதால் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் அணியின் சூழல் குறித்து ஓரளவு புரிதல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு