Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 26 செப்டம்பர் 2026 | 10 புரட்டாசி பராபவ வருடம்

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டி: இந்திய அணிக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டி: இந்திய அணிக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் - ஜோஷ்னா சின்னப்பா ஜோடி இந்தப் பதக்கத்தை வென்றது. கலப்பு இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, ஹாங்காங் ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 10-11, 11-2, 10-11 என்ற புள்ளிக் கணக்கில் போராடி தோல்வியடைந்தது. குறிப்பாக கடைசி செட்டில் இந்திய வீரர்கள் 10-7 என்ற முன்னிலையில் இருந்தனர். வெற்றிக்கு ஒரு புள்ளி மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 3 புள்ளிகளை இழந்ததால் 10-11 என்ற கணக்கில் அந்த செட்டை கைநழுவ விட்டனர்.

Advertisement
வெற்றி வாய்ப்பு மிக அருகில் இருந்தபோதும், ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பை பறித்தது. கடைசி வரை இருவரும் கடுமையாக போராடிய நிலையில், வெற்றியை நெருங்கிச் சென்று தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அரையிறுதியில் தோல்வியடைந்ததால் வேலவன் செந்தில்குமார் - ஜோஷ்னா சின்னப்பா ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு