ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டி: இந்திய அணிக்கு வெண்கலம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டி: இந்திய அணிக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டி: இந்திய அணிக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் - ஜோஷ்னா சின்னப்பா ஜோடி இந்தப் பதக்கத்தை வென்றது. கலப்பு இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, ஹாங்காங் ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 10-11, 11-2, 10-11 என்ற புள்ளிக் கணக்கில் போராடி தோல்வியடைந்தது. குறிப்பாக கடைசி செட்டில் இந்திய வீரர்கள் 10-7 என்ற முன்னிலையில் இருந்தனர். வெற்றிக்கு ஒரு புள்ளி மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 3 புள்ளிகளை இழந்ததால் 10-11 என்ற கணக்கில் அந்த செட்டை கைநழுவ விட்டனர். வெற்றி வாய்ப்பு மிக அருகில் இருந்தபோதும், ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பை பறித்தது. கடைசி வரை இருவரும் கடுமையாக போராடிய நிலையில், வெற்றியை நெருங்கிச் சென்று தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அரையிறுதியில் தோல்வியடைந்ததால் வேலவன் செந்தில்குமார் - ஜோஷ்னா சின்னப்பா ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.