ஆசிய விளையாட்டு இறுதிப்போட்டி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங் தேர்வு
ஆசிய விளையாட்டுப் போட்டியின் 20 ஓவர் கிரிக்கெட் பிரிவு இறுதிப்போட்டி இன்று (சனிக்கிழமை) நிஷின் நகரில் உள்ள கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கான டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்குகிறது.