Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 03 அக்டோபர் 2026 | 17 புரட்டாசி பராபவ வருடம்

காந்தி ஜெயந்தியன்று விடுமுறை வழங்காத 63 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காந்தி ஜெயந்தியன்று விடுமுறை வழங்காத 63 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காந்தி ஜெயந்தி நாளில் தொழிலாளர்களுக்கு சட்டப்படி விடுமுறை வழங்காத 63 நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்ட விதிகளின்படி, தேசிய விடுமுறை நாட்களில் கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். விடுமுறை வழங்காமல் அந்த நாளில் பணிக்கு அழைக்கப்படும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்குவது கட்டாயமாகும். இதற்கான விவரங்களின் நகலை தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்புவதுடன், விடுமுறை நாளில் நிறுவனத்தில் அனைவருக்கும் தெரியும் வகையில் அதை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Advertisement
இதன்படி, காந்தி ஜெயந்தி தினத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜசேகர் தலைமையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. மொத்தம் 88 நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 38 கடைகள், 44 உணவு நிறுவனங்கள் மற்றும் 6 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன. ஆய்வில் விதிமுறைகளை பின்பற்றாத 26 கடைகள் மற்றும் 37 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 63 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. இந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு