Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 15 செப்டம்பர் 2026 | 30 ஆவணி பராபவ வருடம்

அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அமைச்சர் - பூட்டிய பூங்காவால் நீண்ட நேரம் காத்திருப்பு!

அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அமைச்சர் - பூட்டிய பூங்காவால் நீண்ட நேரம் காத்திருப்பு!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, கொடைக்கானல் அண்ணா பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக அமைச்சர் மரிய வில்சன் சென்றார். ஆனால், பூங்கா பூட்டப்பட்டிருந்ததால் அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ளாதது குறித்து உள்ளூர் நிர்வாகிகளிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

Advertisement
இதற்கிடையில், ஊழியர் ஒருவர் பூட்டை உடைத்து பூங்காவை திறக்க முயன்றார். அப்போது, “பூட்டை உடைக்க வேண்டாம். திண்டுக்கல் அல்லது மதுரையில் மாலை அணிவித்து கொள்கிறேன்” என அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். இதையடுத்து சில நிமிடங்களில் பூங்காவின் பூட்டு திறக்கப்பட்டது. பின்னர் அண்ணா சிலைக்கு அமைச்சர் மரிய வில்சன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு