‘96’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆதித்யா பாஸ்கர், ‘அசுரன்’ படத்தில் நடித்த அம்மு அபிராமி ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘பீல் மை லவ்’. ஹரி பிரகாஷ் இயக்கும் இப்படம் காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமியுடன் ஐரா, ராஜய்யப்பா, நோப்லக் ஜேம்ஸ், பிரியங்கா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு எம்.எஸ். சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
Advertisement
ராஜரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் இசையமைக்கின்றனர். ‘பீல் மை லவ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல் கதையை மையமாகக் கொண்ட இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த போஸ்டர், தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.