'விஜய்' என்ற பெயர் 100 ஆண்டுகளுக்கும் நிலைத்திருக்கும்... நடிகர் விஷால் நெகிழ்ச்சி பேச்சு
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால், தற்போது இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'மகுடம்'. இந்தப் படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளதுடன், அஞ்சலி முக்கிய வேடத்தில் தோன்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை சந்தித்தபோது நடைபெற்ற உரையாடலை பகிர்ந்து கொண்டார். அப்போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டட திறப்பு விழா குறித்து முதலமைச்சருடன் பேசியதை அவர் நினைவுகூர்ந்தார்.விரைவில் திறக்கப்பட உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திறப்பு விழா கல்வெட்டில் முதலமைச்சரின் பெயர் இடம்பெறவுள்ளது.இதுகுறித்து விஷால் பேசியபோது, "நடிகர் சங்கத்தின் புதிய கட்டட கல்வெட்டில் யாருடைய பெயர்கள் இடம்பெறும் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் இறுதியில் பார்த்தபோது, 'C. Joseph Vijay' என்ற பெயரே அதில் இடம்பெற இருப்பதை அறிந்தேன். இந்தக் கட்டடம் இன்னும் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும். அதுபோல அந்த கல்வெட்டில் இடம்பெறும் உங்கள் பெயரும் நூற்றாண்டுகளுக்குப் பிறகும் வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கும் என்று முதலமைச்சரிடம் கூறினேன்" என்றார்.மேலும், ஒரு கல்வெட்டில் பெயர் இடம்பெறுவது என்பது மிகப்பெரிய கவுரவம் என்றும், அது பல தலைமுறைகளுக்கும் வரலாற்றுச் சான்றாக நிலைத்திருக்கும் என்றும் விஷால் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.