ரூ.80 கோடி வசூலை குவித்த ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ரவி தேஜா, ரசிகர்களால் ‘மாஸ் மகாராஜா’ என்று அழைக்கப்படுகிறார். அவரது 77-வது படமாக உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.‘மஜிலி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவ நிர்வாணா இப்படத்தை இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் குமார், பேபி நக்ஷத்திரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
‘இருமுடி கட்டு’ படத்தில் ரவி தேஜா ஐயப்ப பக்தராக, தலையில் இருமுடி சுமந்தபடி வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஆன்மிகம், உணர்வுகள் மற்றும் பரபரப்பான கதைக்களத்தை மையமாகக் கொண்ட இப்படத்தில் அவரது மாறுபட்ட கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.படத்தின் முதல் பாடலான ‘இருமுடி கட்டு’ பாடலை அனந்த் பாடியுள்ளார். இதன் பாடல் வரிகளை சிவ நிர்வாணா மற்றும் கல்யாண் சக்ரவர்த்தி இணைந்து எழுதியுள்ளனர்.இந்நிலையில், திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.80 கோடி வசூலை எட்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.