மாற்றுக்கட்சியில் இருந்து தவெகவில் இணைந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் அறிவிப்பு
தமிழக வெற்றிக்கழகத்தில் அண்மையில் இணைந்துள்ள பெலிக்ஸ் ஜெரால்ட், வழக்கறிஞர் சத்யகுமார், விக்னேஸ்வரன், தேன்மொழி பிரசன்னா, நாராயணன், சசிரேகா, செல்வக்குமார் மற்றும் விவேக் கணநாதன் ஆகியோர் தேசிய செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல், முகில் வீரப்பன், இன்பராஜ், முஹமது இப்ராஹிம், ஜெகதீசபாண்டியன், ஜெயக்குமார், கந்தசாமி, ஜலீல், தேவகுமார் மற்றும் சவுந்தரராஜா ஆகியோருக்கு மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.புதிதாக பொறுப்பேற்றுள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், முதல்வருமான விஜய், கட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுப்பதில் தனது அறிவுறுத்தல்களையும், பொதுச்செயலாளர் ஆனந்தின் வழிகாட்டுதலையும் பின்பற்றி அவர்கள் செயல்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.மேலும், புதிய நிர்வாகிகளுக்கு கட்சியினர் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.