பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் 4.3 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி காலை 9 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மையப்பகுதி 32.679 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 73.623 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் தொடர்பாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.இதற்கு முன்னதாக, பாகிஸ்தானில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது.