Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

தீரன் சின்னமலையின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து முதல்-அமைச்சர் விஜய் மரியாதை

தீரன் சின்னமலையின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து முதல்-அமைச்சர் விஜய் மரியாதை
முதல்-அமைச்சர் விஜய், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில், ஆங்கிலேய ஆட்சியின் ஒடுக்குமுறைக்கு எதிராக துணிச்சலுடன் போராடி, நாட்டின் விடுதலைக்காக குரல் கொடுத்த மாவீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.மேலும், கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூல் கொள்கைகளையும் அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்து போராடிய தீரன் சின்னமலை, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரையே அர்ப்பணித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
அவரது வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக மனப்பான்மை தலைமுறை தலைமுறையாக மக்களுக்கு உத்வேகம் அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இறுதியாக, சுதந்திர இந்தியாவை உருவாக்க தனது உயிரை ஈந்த மாவீரர் தீரன் சின்னமலையின் புகழ் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் தனது பதிவில் கூறியுள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு