Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது, மேகதாது அணை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, தவெக அரசைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2026 சட்டமன்றத் தேர்தலின்போது 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க் கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் தவெக அரசு, குறு மற்றும் சிறு விவசாயிகள் ரூ.75,000 வரை பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாகவும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளைப் பிரித்து கடன் தள்ளுபடி அறிவித்திருப்பது அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தி வருவதாகவும், இதனால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாததுடன், மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்க தவெக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, அதிமுக மற்றும் டெல்டா மாவட்ட விவசாய சங்கங்கள் சார்பில் ஏற்கெனவே போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு இடம்பெறாவிட்டால், தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement
இந்நிலையில், ஆகஸ்ட் 6-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து, விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாத தவெக அரசைக் கண்டித்தும், மேகதாது அணை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், காவிரியில் தமிழகத்துக்குரிய நீரைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனக் கூறியும், ஆகஸ்ட் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்க உள்ளார். சென்னை மாவட்டத்தைத் தவிர்த்து மற்ற வருவாய் மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை வகிப்பவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் போராட்டங்களில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய மற்றும் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டங்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு