தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் எப்போது? - நிதியமைச்சர் விளக்கம்
கடந்த மே மாதத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற தவெக அரசு, தனது முதல் நிதிநிலை அறிக்கையை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் நிலவியது.தேர்தலின்போது மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குதல், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் கொண்ட சிறு விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்தல், ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக வழங்குதல், வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தவெக அறிவித்திருந்ததுஆனால், இன்று நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில், மக்கள் எதிர்பார்த்த இந்த முக்கிய நலத்திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.இதையடுத்து, புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் முன்வைத்து வருகின்றன.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறுகையில், மாநிலத்தின் நிதி நிலையை மீண்டும் சீரான நிலைக்கு கொண்டு வர குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும். உடனடி அரசியல் லாபத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட அரசு விரும்பவில்லை என்றும், நிதி நிலைமை சீரடைந்த பிறகு தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் விளக்கமளித்தார்.