Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

தூக்கத்திலேயே மாரடைப்பு... பிரபல ’எம்எம்ஏ’ வீரர் திடீர் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்

தூக்கத்திலேயே மாரடைப்பு... பிரபல ’எம்எம்ஏ’ வீரர் திடீர் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்
பிரேசிலைச் சேர்ந்த பிரபல மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் (MMA) வீரர் ஆலன் நாசிமெண்டோ திடீரென உயிரிழந்த சம்பவம் விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 34 வயதான அவர், தூக்கத்தில் ஏற்பட்ட மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. 2011ஆம் ஆண்டு எம்எம்ஏ போட்டிகளில் அறிமுகமான ஆலன் நாசிமெண்டோ, தனது முதல் 10 போட்டிகளில் 9 வெற்றிகளைப் பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தனது விளையாட்டு வாழ்க்கையில் மொத்தம் 29 போட்டிகளில் பங்கேற்று 22 வெற்றிகளைப் பதிவு செய்தார்.2021ஆம் ஆண்டு யுஎப்சியில் (UFC) களமிறங்கிய நாசிமெண்டோ, ஜேக் ஹாட்லி, கார்லோஸ் ஹெர்னாண்டஸ், கோடி டர்டன் உள்ளிட்ட முன்னணி வீரர்களை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்தார்.ஆலன் நாசிமெண்டோவின் எதிர்பாராத மறைவு, உலகம் முழுவதும் உள்ள யுஎப்சி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Advertisement
சமூக வலைதளங்களில் ஏராளமானோர் அவருக்கு இரங்கல் தெரிவித்து, எம்எம்ஏ உலகில் அவர் படைத்த சாதனைகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு