Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

சுருளி அருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

சுருளி அருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவி, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர், சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியை கடந்து வந்து உருவாகும் இயற்கை அருவியாகும். இந்த அருவியை காணவும், குளிக்கவும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.சமீபத்தில் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்த மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Advertisement
இதையடுத்து பாதுகாப்பு காரணங்களால் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.தற்போது அருவியின் நீர்வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால், இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று (திங்கள்கிழமை) காலை முதல் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து ஏராளமானோர் உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு