Skip to main content
🌤️ —°C
வியாழன் | 30 ஜூலை 2026 | 14 ஆடி பராபவ வருடம்

காவிரி அணைகளை பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் ஏற்பாடு: டி.கே.சிவக்குமார் தகவல்

காவிரி அணைகளை பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் ஏற்பாடு: டி.கே.சிவக்குமார் தகவல்
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த டெல்லி சென்றுள்ள கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், நேற்று கர்நாடக பவனில் சட்ட நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பிறப்பித்துள்ள உத்தரவைத் தொடர்ந்து, அதற்கு எதிராக கர்நாடகம் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநிலத்தில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லாத சூழலை கருத்தில் கொண்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்குமாறு ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளதாக கூறினார். இந்த முடிவு, அட்வகேட் ஜெனரல், சட்ட நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டதாகவும், மேல்முறையீட்டுக்கான வரைவு அறிக்கை தற்போது தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்மேலும், தமிழக முதல்-அமைச்சர் விஜய் தம்மை நேரில் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துக் கர்நாடக தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருப்பதுடன், தொலைபேசியிலும் தொடர்புகொண்டதாக அவர் கூறினார்.
Advertisement
பேச்சுவார்த்தைக்காக வருமாறு அவரை அழைத்துள்ளதாகவும், மற்றொரு மாநிலத்திலிருந்து வரும் விருந்தினர்களை மரியாதையுடன் வரவேற்பது தங்களது கடமை என்றும் குறிப்பிட்டார்.விஜயின் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த டி.கே.சிவக்குமார், காவிரி அணைகள் அமைந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிடுமாறும் அவரிடம் கேட்டுள்ளதாக கூறினார். அதற்காக தேவையான ஹெலிகாப்டர் வசதியும் செய்து தரப்படும் என்றும், கர்நாடகத்தில் நிலவும் உண்மை நிலையை அவர் நேரில் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். அதன் பிறகு அவர் எவ்வகையான முடிவை எடுக்கிறார் என்பதை பார்க்கலாம் எனவும் டி.கே.சிவக்குமார் கூறினார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு