காமன்வெல்த் பதக்க வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்-அமைச்சர் விஜய்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்தி பாராட்டினார்.இந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றிய ராஜா முத்துப்பாண்டி மற்றும் பிரவீன் ஆகியோருக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வபிரபுவுக்கும் அவர் ஊக்கத்தொகையை வழங்கினார்.அதன்படி, வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி மற்றும் பிரவீனுக்கு தலா ரூ.30 லட்சமும், வெண்கலப் பதக்கம் பெற்ற செல்வபிரபுவுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டது.சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்திய வீரர்களின் சாதனையை முதல்-அமைச்சர் விஜய் பாராட்டியதுடன், வருங்கால போட்டிகளிலும் இதேபோன்ற சிறப்பான வெற்றிகளைப் பெற்று மாநிலத்திற்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.