Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 25 ஆகஸ்ட் 2026 | 9 ஆவணி பராபவ வருடம்

கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நிறைவு: 1.07 கோடி பெயர்கள் நீக்கம்

கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நிறைவு: 1.07 கோடி பெயர்கள் நீக்கம்
கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 17-ம் தேதி நிறைவடைந்தது.இதையடுத்து, மாநிலத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 1 கோடியே 07 லட்சத்து 96 ஆயிரத்து 339 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மாநில தலைமை தேர்தல் அதிகாரி அன்புகுமார் இந்த வரைவு பட்டியலை வெளியிட்டார்.SIR பணிகள் தொடங்குவதற்கு முன்பு கர்நாடகாவில் 5 கோடியே 54 லட்சத்து 32 ஆயிரத்து 314 வாக்காளர்கள் இருந்தனர். திருத்தப் பணியின்போது அடையாளம் காண முடியாத 15 லட்சத்து 17 ஆயிரத்து 42 பேர், நிரந்தரமாக இடம்பெயர்ந்த 65 லட்சத்து 45 ஆயிரத்து 679 பேர், உயிரிழந்த 16 லட்சத்து 39 ஆயிரத்து 664 பேர், போலி வாக்காளர்கள் 7 லட்சத்து 09 ஆயிரத்து 870 பேர் மற்றும் பிற காரணங்களால் 3 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் என மொத்தம் 1 கோடியே 07 லட்சத்து 96 ஆயிரத்து 339 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
Advertisement
இது மொத்த வாக்காளர்களில் 19.4 சதவீதமாகும்.திருத்தத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 4 கோடியே 46 லட்சத்து 35 ஆயிரத்து 975 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.பெங்களூருவை பொறுத்தவரை, SIR பணிக்கு முன்பு 1 கோடியே 03 லட்சத்து 88 ஆயிரத்து 363 வாக்காளர்கள் இருந்தனர். திருத்தப் பணிக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 56 லட்சத்து 99 ஆயிரத்து 660 ஆக குறைந்துள்ளது. இதன்படி, 46 லட்சத்து 88 ஆயிரத்து 703 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.வரைவு பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், இன்று முதல் செப்டம்பர் 23-ம் தேதி வரை ஆட்சேபனை தெரிவித்து விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு