Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

காசோலை மோசடி வழக்கு நடிகர் சரத்குமாருக்கு சம்மன்

காசோலை மோசடி வழக்கு நடிகர் சரத்குமாருக்கு சம்மன்
காசோலை மோசடி தொடர்பான வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணாவிடம் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது தனிப்பட்ட கடனை சமாளிப்பதற்காக சரத்குமார் ரூ.2 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்தத் தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக அவர் ஸ்ரீகிருஷ்ணாவிடம் காசோலை வழங்கியதாக தெரிகிறது.இந்த காசோலையை ஸ்ரீகிருஷ்ணா வங்கியில் செலுத்தியபோது, சரத்குமாரின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் அது திரும்பியதாக கூறப்படுகிறது.இதையடுத்து, காசோலை மோசடி தொடர்பாக சரத்குமாருக்கு எதிராக ஸ்ரீகிருஷ்ணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் செப்டம்பர் 10-ம் தேதி சரத்குமார் நேரில் ஆஜராகும் வகையில் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதனால், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு