'எல்.கே.ஜி.' படத்தை போல அரசியலுக்கு வருவீர்களா? – ஆர்.ஜே. பாலாஜி பதில்
ரேடியோ ஜாக்கியாக பயணத்தை தொடங்கி, நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருபவர் ஆர்.ஜே. பாலாஜி.சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் நடிகர் சூர்யாவுக்கு கம்பேக் படமாகவும் அமைந்தது. மேலும், ரூ.300 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது புதிய படங்களில் நடித்து வரும் ஆர்.ஜே. பாலாஜி, மற்றொரு புதிய கதையையும் உருவாக்கி வருகிறார்.இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், ‘எல்.கே.ஜி.’ திரைப்படத்தில் வருவது போல நீங்களும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா? அதற்கான எண்ணம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த ஆர்.ஜே.
பாலாஜி, ஏற்கனவே பலர் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், தானும் அந்தப் பாதையில் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். மேலும், அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணமே தனக்கு இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், “இப்போது நான் நிறைய மாறிவிட்டேன். முன்பு அதிகமாக கோபப்படுவேன். தற்போது பக்குவமடைந்து வருகிறேன்” என்று கூறினார்.